இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, கடந்த மார்ச் 31ஆம் திகதி முதல் மே 15ஆம் திகதி வரை தீவின் பல பகுதிகளில் இடம்பெற்ற தீவைப்பு, கொள்ளை, கொலை உள்ளிட்ட அனைத்து உயிர் மற்றும் உடைமைச் சேதங்களையும் ஆராய்ந்து அறிக்கையிட விசாரணைக் குழுவை நியமித்துள்ளார்.
உயர் நீதிமன்ற நீதியரசர் ஜனாதிபதி சட்டத்தரணி பி.பி. அலுவிஹாரே ஆணைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எஸ்.எம்.விக்ரமசிங்க மற்றும் மேலதிக பிரதான மதிப்பீட்டாளர் என்.ஏ.எஸ்.வசந்தகுமார ஆகியோர் ஆணைக்குழுவின் எஞ்சிய அங்கத்தினர்களாக உள்ளனர்.
ஆணைக்குழுவின் செயலாளராக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் புவனேகா ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.