இயக்குனர் நெல்சன் திலீப்குமார் , இளையதளபதி விஜய், இசையமைப்பாளர் அனிருத் மற்றும் பூஜா ஹெட்ச் ஆகியோரின் கூட்டணியில் கடந்த ஏப்ரல் 13ம் தேதி வெளியாகி இருந்த திரைப்படம் பீஸ்ட்.

படம் உலகம் முழுவதும் செம மாஸாக வெளியாகிருந்தாலும் இரண்டாவது நாளே படம் மோசமான வசூலை பெற ஆரம்பித்தது. அதாவது முதல் நாளில் வந்த விமர்சனங்கள் படத்தை அப்படியே நஷ்டத்தில் தள்ளியது.

முதலீடு செய்த பணத்தை சிலர் மட்டுமே பெற்றுள்ளார்கள், பலர் நஷ்டம் அடைந்ததாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

படம் வெளியாகி 50வது நாளை எட்டிவிட்ட நிலையில் தற்போது படத்தின் 50 நாள் வசூல் விபரம் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் படம் ரூ. 227 கோடி வசூலித்துள்ளதாம், தமிழகத்தில் மட்டும் ரூ. 120 கோடி வரை வசூலித்திருக்கிறதாம் தளபதி விஜயின் பீஸ்ட்.

Share.
Exit mobile version