முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பதவி விலகுமாறு கோரியதே தனது வாழ்க்கையில் எடுத்த மிகவும் கடினமான மற்றும் வேதனையான முடிவு என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தேசத்தை நினைத்து தான் இவ்வாறான தீர்மானத்தை எடுத்ததாக ஜனாதிபதி தெரிவித்தார்.

அரசியலமைப்பின் உத்தேச 21ஆவது திருத்தம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, இது தமது முழுமையான ஒருமித்த கருத்துடன் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பாராளுமன்றக் குழுவுடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷ ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இந்த சந்திப்பின் போது நீதியமைச்சர் பேராசிரியர் விஜேதாச ராஜபக்ஷ, அரசியலமைப்பின் உத்தேச 21வது திருத்தம் குறித்து குழுவிற்கு விளக்கமளித்தார்.

Share.
Exit mobile version