இலங்கைக்கு 28 மில்லியன் டொலர் பெறுமதியான மருந்துகள் மற்றும் அத்தியாவசிய சத்திரசிகிச்சை உபகரணங்களை நன்கொடையாக வழங்க சீன அரசாங்கம் முன்வந்துள்ளது.

28 மில்லியன் டொலர் பெறுமதியான மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சை உபகரணங்களை இரண்டு தனித்தனி சந்தர்ப்பங்களில் சீனாவினால் நன்கொடையாக வழங்கவுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக சந்திரகுப்த தெரிவித்துள்ளார்.

ஜோர்தான் மற்றும் மலேசியாவில் உள்ள ஒரு அமைப்பு இலங்கைக்கு மருந்துகளை வழங்க முன்வந்துள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் பற்றாக்குறையாக உள்ள மருந்துகளை வழங்க சுவிட்சர்லாந்தில் உள்ள பௌத்த அறக்கட்டளையும் முன்வந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகராலயம் பங்களாதேஷ் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 2.2 மில்லியன் டொலர் பெறுமதியான அத்தியாவசிய மருந்துகளை செவ்வாய்க்கிழமை (31) கையளித்துள்ளது.

Share.
Exit mobile version