2022 மே 31 ஆம் தேதி காலை நிலவரப்படி சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் பல இடங்களில் 06 நிவாரண குழுக்களை இலங்கை கடற்படை நிலைநிறுத்தியுள்ளது.

தீவின் பல பகுதிகளில் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளத்தினால் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக கடற்படையின் நிவாரணப் படகுகள் அந்தந்த பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன அவர்களின் பணிப்புரைக்கு அமைய மேற்கு கடற்படை கட்டளை 04 வெள்ள நிவாரண குழுக்களை இரத்தினபுரிக்கு அனுப்பி வைத்துள்ளது. அதேபோன்று, தெற்கு கடற்படை கட்டளை 02 நிவாரண குழுக்களை காலி தவலம பகுதிக்கு அனுப்பி வைத்துள்ளது.

இதேவேளை, இரத்தினபுரி, கலவான பொதுப்பிட்டிய வீதியில் தெல்கொட பாலத்தை அண்மித்த பகுதியில் சிறு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், இரத்தினபுரியில் நிலைகொண்டுள்ள கடற்படைக் குழுக்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் சுமையைக் குறைக்கும் வெள்ள நிவாரணப் பணிகளில் தற்போது ஈடுபட்டுள்ளனர்.

மேலும், மேற்கு கடற்படை கட்டளையில் 03 வெள்ள நிவாரண குழுக்களையும், தெற்கு கடற்படை கட்டளையில் 08 குழுக்களையும், வடமேற்கு கடற்படை கட்டளையில் மேலும் 18 குழுக்களையும் துரிதமாக அனுப்புவதற்காக கடற்படையினர் தயார் நிலையில் வைத்துள்ளனர்.

Share.
Exit mobile version