நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமையைக் கருத்திற் கொண்டு கல்வியியல் கல்லூரிகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் 5,000 ரூபா கொடுப்பனவை ரூபா 10,000 ரூபாவாக அதிகரிக்குமாறு இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜாசிங்க இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் ,

மக்களின் அன்றாட வாழ்க்கை செலவு அதிகரித்துள்ளது. எனினும் கல்வியியற் கல்லூரி மாணவர்களுக்கு 5,000 ரூபா மாத்திரமே கொடுப்பனவாக வழங்கப்படுகிறது.

இதனால் மாணவர்களுக்கான உணவு உள்ளிட்டவற்றை வழங்குவதில் கல்லூரி நிர்வாகம் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது.

மேலும் 19 கல்வியியல் கல்லூரிகளில் 12,000 மாணவர்கள் ஆசிரிய பயிற்சி பெறுகின்றனர்.

நாட்டின் பொருளாதார பிரச்சனை காரணமாக கல்வியியல் கல்லூரிகளின் நிர்வாகம் கடுமையான நிதி சிக்கல்கள் முகங்கொடுத்திருக்கிறது.

எனவே அவர்களுக்கான கொடுப்பனவை 10 000 ரூபா வரை அதிகரிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Exit mobile version