ஐபிஎல் 2022 தொடரில் குஜராத் டைட்டன்ஸ் புதிய சாம்பியனாக உருவெடுக்குமா அல்லது ராஜஸ்தான் ரோயல்ஸ் தனது இரண்டாவது பட்டத்தை வெல்லுமா என பெரும் எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

உலகின் பிரசித்தி பெற்ற விளையாட்டு தொடர்களில் ஒன்றான ஐபிஎல் 2022 தொடா் கடந்த ஒன்றரை மாதங்களாக மும்பை, புனேயில் நடைபெற்றது. இந்நிலையில் கொல்கத்தாவில் தெரிவாகும் 1 மற்றும் வெறியேற்றம் போட்டிகள் நடைபெற்றன.

அகமதாபாதில் தெரிவாகும் இரண்டாவது போட்டி நிறைவடைந்தது.

இந்நிலையில், இன்று (29) நடைபெறவுள்ள இறுதி ஆட்டத்தில் 2008 சாம்பியன் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியுடன், முதன்முறையாக ஐபிஎல் தொடரில் அறிமுகமான குஜராத் டைட்டன்ஸ் அணி மோதுகிறது.

கடந்த 2008இற்கு பின் தற்போது தான் ராஜஸ்தான் அணி இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது. ஆனால் அறிமுகமான முதல் தொடரிலேயே இறுதிச்சுற்றுக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது குஜராத் அணி.

குஜராத் 14 போட்டிகளில் 10 வெற்றியுடன் 20 புள்ளிகளையும், ராஜஸ்தான் ரோயல்ஸ் 14 போட்டிகளில் 9 வெற்றியுடன் 18 புள்ளிகளையும் பெற்று முதலிரண்டு இடங்களைப் பெற்றன.

*சமபலத்துடன் அணிகள்:*

இரு அணிகளும் ஆட்டத்தின் போக்கையே மாற்றக் கூடிய துடுப்பாட்ட வீரர்கள், பந்துவீச்சாளர்கள் இடம் பெற்றுள்ளதாஸ் சமபலத்துடன் உள்ளன. எனினும் குஜராத் அணி தொடா்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்துள்ளது. இறுதி போட்டிக்கு தெரிவாகும் முதலாவது போட்டியில் ராஜஸ்தனை வீழ்த்திய உற்சாகத்துடன் உள்ளது.

*பாண்டியா, ரஷீத் கான்:*

ஏலத்துக்கு முன்பு குஜராத் அணி தேறுமா என விமா்சனங்கள் எழுந்தன. ஆனால் தலைவர் ஹாா்திக் பாண்டியா தலைமையில் அந்த அணி எழுச்சி பெற்று இறுதிச் சுற்றுக்கு வந்துள்ளது. உடல்தகுதி இல்லாமல் இருந்த ஹாா்திக் தனது சிறந்த ஆட்டத்தின் மூலம் தனது அணியையும் வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்தாா். அந்த அணியில் துடுப்பாட்டத்தில் டேவிட் மில்லா், ராகுல் டிவாட்டியா, ரித்திமான் சாஹா, சகலதுறை வீரர் ரஷீத் கான் துடுப்பாட்டம், பந்துவீச்சில் அற்புதமாக ஆடி வருகின்றார். மேலும் சொந்த மைதானம், ரசிகா்கள் ஆதரவு குஜராத் அணிக்கு கூடுதல் சாதகமாகும்.

*ஜோஸ் பட்லா் அபாரம்:*

அதே வேளையில் ராஜஸ்தான் அணி சஞ்சு சாம்சன் தலைமையில் பல்வேறு தடைகளை கடந்து இறுதிச் சுற்றுக்கு வந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் ஜோஸ் பட்லரின் அற்புத துடுப்பாட்டம் ஆகும். தனி நபராக அவா் பல ஆட்டங்களில் ராஜஸ்தான் வெற்றிக்கு காரணமாக உள்ளாா். ராஜஸ்தான் அணியில் பட்லா், ஷுப்மன் கில், சாம்ஸன், யஷஸ்வி ஜெய்ஸ்வால் பேட்டிங்கில் வலு சோ்க்கின்றனா். பந்துவீச்சில் சஹல், அஸ்வின், பிரசித் கிருஷ்ணா பலம் சோ்க்கின்றனா். மறைந்த ஜாம்பவான் ஷேன் வோர்னுக்கு மரியாதை செலுத்தும் வகையில் பட்டம் வெல்ல ராஜஸ்தான் முனைப்பில் உள்ளது.
________________________

*⭕ஐபில் இறுதிப் போட்டி :* குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ்

*⭕காலம்/நேரம் :* அகமதாபாத்,இரவு 8.00

Share.
Exit mobile version