மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கத்தின் கொள்கை அறிவிக்கப்பட்டவுடன் பொதுமக்களிடம் கலந்தாலோசிக்கத் தயாராகி வருவதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மின் கட்டண அதிகரிப்பு தொடர்பான இறுதி அதிகாரம் PUCSL தான் என அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கட்டண உயர்வுக்கான CEB பரிந்துரைகளுக்குப் பிறகு, PUCSL அதன் முடிவை எடுக்கும் என்றும், அதன் பிறகு அரசாங்கத்தின் கொள்கையை கோரப்படும் என்றும் அவர் கூறினார்.
அதன்பிறகு, PUCSL ஆனது அமைச்சரவையின் ஒப்புதலையும் பெற்று, துறைகள் மற்றும் மின்சார நுகர்வுக்கு ஏற்ப கட்டணத்தை அதிகரிக்கும்.
கட்டண அதிகரிப்பு தொடர்பில் மக்களின் யோசனைகள் மற்றும் ஆலோசனைகளை பெற்றுக்கொள்வதற்காக இந்த பொது கலந்தாய்வு நடத்தப்படும் என ரத்நாயக்க தெரிவித்தார்.