பண்டாரகம, அட்டாலுகம பிரதேசத்தில் 9 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த விசேட குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

பொலிஸ் விசாரணைகளுக்கு உதவுவதற்காக குழு தொடர்ந்தும் செயற்படும் என அதன் தலைவர் கலாநிதி உதய குமார அமரசிங்க தெரிவித்தார்.

இதேவேளை, பண்டாரகம, அட்டாலுகம பிரதேசத்தில் சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள நான்கு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் இதுவரை சுமார் 20 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், சிறுமியின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

அவரது சடலம் தற்போது பாணந்துறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனை இன்று (29) இடம்பெறவுள்ளது.

Share.
Exit mobile version