உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) இலங்கையில் மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதில் கவனம் செலுத்தி வருவதாக அதன் பணிப்பாளர் நாயகம் Dr. Tedros Adhanom Ghebreyesus தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஆரம்ப சுகாதார நிலையங்களைத் தொடர உதவுவதில் WHO கவனம் செலுத்துவதாக அவர் கூறினார்.

சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் உள்ள உலக சுகாதார அமைப்பின் தலைமையகத்தில் அண்மையில் நடைபெற்ற உலக சுகாதார மாநாட்டின் போது, ​​சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன உள்ளிட்ட இலங்கை பிரதிநிதிகளுடன் டொக்டர் டெட்ரோஸ் மேலும் கலந்துரையாடியிருந்தார்.

இதேவேளை, இந்தியா, பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் உதவியால் தற்போது ஏற்பட்டுள்ள மருந்து தட்டுப்பாடு சுமார் 30% பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

Share.
Exit mobile version