மே 9ஆம் திகதி நடைபெற்ற கோட்டகோகம மற்றும் மைனகோகம அமைதிப் போராட்டத்தின் மீதான தாக்குதல்கள் மற்றும் அமைதியின்மை தொடர்பான விசாரணைகள் தொடர்பிலும் வாக்குமூலம் பெறுவதற்காகவே முன்னாள் பிரதமர் அழைக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு மேலதிகமாக, முன்னாள் அமைச்சர்களான நாமல் ராஜபக்ஷ, ரோஹித அபேகுணவர்தன, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அமைச்சரவை அமைச்சர் ரமேஷ் பத்திரன ஆகியோரும் எதிர்வரும் புதன்கிழமை (1) ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அவன்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி நாளை (30) மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற சம்பவங்களுடன் வடரெகா சிறைச்சாலையில் கைதிகள் குழுவொன்று ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டை விசாரிப்பதற்காகவே சேனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் அழைக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் முன்னதாக ஆணைக்குழு முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தார்.

மேல்மாகாண பொலிஸ் மா அதிபர் மற்றும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோரும் எதிர்வரும் வியாழக்கிழமை (2) மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Share.
Exit mobile version