அட்டலுகம பிரதேசத்தை சேர்ந்த அப்பாவி சிறுமியை கொலை செய்த சந்தேக நபர்களை கைது செய்ய துரித நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.
“ஈவிரக்கமற்ற முறையில் கொல்லப்பட்ட சிறுமி பாத்திமா ஆயிஷாவின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவிக்கின்றேன்.இந்த கொடூர குற்றத்திற்கு அவரது குடும்பத்தினருக்கு விரைவில் நீதி கிடைக்க நான் உறுதியளிக்கிறேன்.சிறுமி ஆயிஷா சுவர்க்கம் செல்ல எனது பிரார்த்தனைகள்.” என ஜனாதிபதி இன்று ட்வீட் செய்துள்ளார்.
9 வயது ஆயிஷா நேற்று காலை முதல் காணாமல் போனதாக புகார் கூறப்பட்டது, இன்று அதிகாலை அவரது வீட்டிற்கு அருகிலுள்ள சதுப்பு நிலத்தில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது.
சிறுமி வேறு இடத்தில் கொலை செய்யப்பட்டு சடலம் கண்டெடுக்கப்பட்ட இடத்திற்கு கொண்டு வரப்பட்டதாக நம்புவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.