தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் தளபதி 66 படத்தில் நடித்து வருவது அனைவருக்கும் தெரியும். ரசிகர்களுக்கு விருந்தாக இப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவித்துவிட்டனர்.

தளபதி 67 – தளபதி 68

இப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மீண்டும் விஜய் இணைந்து நடிக்கவிருக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. தளபதி 67 படத்தின் அறிவிப்பிற்காக தான், தளபதியின் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
இப்படதிற்கு பின் விஜய் யாருடைய இயக்கத்தில் நடிக்கவுள்ளார்?
அண்மையில் பிகில் பட ராயப்பன் கதாபாத்திரம் ஒரு படமாக வெளிவந்தால் எப்படி இருக்கும்? என்று கேட்டு, அமேசன் ட்விட்டரில் பதிவு செய்திருந்தது. இதற்கு அட்லீ “செஞ்சுட்டா போச்சு” என்று பதிவு செய்திருந்தார்.

விஜய் நடிக்கும் ‘ராயப்பன்’

இதனை வைத்து பார்க்கும் பொழுது, தளபதி 68 படத்தை அட்லீ இயக்கப்போகிறார் என திரை வட்டாரத்தில் அதிகம் பேசத்துவங்கிவிட்டனர்.
மேலும், சமீபத்தில் வெளிவந்த செய்தியை வைத்து பார்க்கும் போது, இப்படத்திற்கு “பிகில் 2”, அல்லது “ராயப்பன்” என்று தலைப்பு இருக்கலாம் என பேசப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் அட்லீயின் தரமான சம்பவத்தை..

Share.
Exit mobile version