2021 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நடைபெற்று வரும் நிலையில் அரசாங் கம் தன்னிச்சையான தீர்மானங்களை எடுத்தாலும் பொதுமக்கள் பொறுமை காக்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன.

பரீட்சை முடிவடைந்தவுடன் நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கையின் தொழிலாள வர்க்கம் மற்றும் விவசாயிகள் மீது ராஜபக்ஷ தலைமையிலான நிர்வாகம் பெரும் நிதிச்சுமைகளை சுமத்தி யுள்ளதாக தேசிய மக்கள் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் சமீர பெரேரா தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சாதாரண தரப் பரீட்சைக்குப் பின்னரும் தொடரும் போராட்டங்கள் மூலம் ராஜபக்ஷக் களின் எதேச்சதிகாரத் தலைமை முடிவுக்கு வரும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share.
Exit mobile version