மக்களை ஜப்பான் மொழியைக் கற்றுக் கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆலோசனை வழங்கியுள்ளார்.
ஜப்பான் மொழியைக் கற்றுக்கொண்டால் ஜப்பானில் வேலை வாய்ப்பு பெற்றுக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜப்பானில் சுமார் 350,000 வேலை வாய்ப்புக்கள் உண்டு என அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக முதியோர் பராமரிப்பு மற்றும் உணவு ஏற்பாடு செய்தல் உள்ளிட்ட துறைகளில் இவ்வாறு தொழில் வாய்ப்புக்கள் உண்டு என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த துறைகளில் பணியாற்றுவதற்கு ஜப்பான் மொழித் தேர்ச்சி கட்டாயமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் ஊடாக ஜப்பான் மொழி கற்கை நெறிகளை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Share.
Exit mobile version