அரசியல்வாதிக்கு சொந்தமான 10 நிறுவனங்களில் இன்னும் மத்திய வங்கிக்கு செலுத்தப்படாத கடன் தொகை 54 பில்லியன் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சானக்கியன் இராசமாணிக்கம் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் தயா கமகேவுக்குச் சொந்தமான தயா அப்பேரல் மற்றும் மத்திய வங்கி பிணைமுறி மோசடியில் சிக்கியுள்ள அர்ஜூன் அலோசியஸுக்குச் சொந்தமான மெண்டிஸ் டிஸ்டில்லரீஸ் ஆகியன இந்தச் செலுத்தப்படாத கடன்களில் அடங்குவதாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

பொது நிறுவனங்கள் தொடர்பான குழுவின் (COPE) அறிக்கையின்படி தயா அப்பேரல் நிறுவனம் ரூ. 3 பில்லியன், அதே சமயம் டபிள்யூ.எம். மெண்டிஸ் டிஸ்டில்லரீஸ் நிறுவனம் ரூ. 3.242 பில்லியன்.

செயற்படாத கடன்கள் தள்ளுபடி செய்யப்படவில்லை எனவும், கடனை சட்டரீதியாக மீளப் பெறுவதற்கான வழிகள் குறித்து ஆராய்ந்து வருவதாகவும் மக்கள் வங்கி தெரிவித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. சானக்கியன் இராசமாணிக்கம் மேலும் குறிப்பிட்டார்.

Share.
Exit mobile version