மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் விகாராதிபதி வணக்கத்துக்குரிய வலவாஹெங்குனவேவே தம்மரதன தேரரை அவமதித்து அச்சுறுத்தும் வகையில் கருத்து வெளியிட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை எதிர்வரும் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று (26) பிற்பகல் கொழும்பு பிரதான நீதவான்​ பிரசன்ன அல்விஸ் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் விகாராதிபதியை அச்சுறுத்தி அவதூறான கருத்துக்களை வௌியிட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது குறிப்பிட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார், சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதவான், சந்தேகநபரை எதிர்வரும் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

Share.
Exit mobile version