60 வகையான மருந்துகளின் விலை இன்று (26) முதல் 16% குறைக்கப்பட உள்ளது.

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவினால் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

புதிய விலை திருத்தத்தின் பிரகாரம் 16% விலை குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் டொலரின் பெறுமதி வீழ்ச்சி காரணமாக இறக்குமதி செய்யப்படும் மருந்துகளின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புதிய வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், 500 மில்லிகிராம் பரசிட்டமோல் மாத்திரை ஒன்றின் விலை 3 ரூபா 49 சதங்களாக குறைக்கப்பட்டுள்ள அதேவேளை, இன்சுலின் 10 மில்லிகிராம் குப்பியின் அதிகபட்ச சில்லறை விலை 2270 ரூபா 2 சதமாகும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 375 மில்லிகிராம் அமோக்ஸிலின் கிளாவுலினிக் அமிலத்தின் அதிகபட்ச சில்லறை விலை 70 ரூபா 32 சதங்களாக குறைக்கப்பட்டுள்ளது.

Share.
Exit mobile version