அலவத்துகொட பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அக்குறனை துனுவில பிரதேசத்தில் வீடொன்றை சுற்றிவளைத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் பல ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

டி-56 துப்பாக்கி தோட்டாக்கள் 11, அலைபேசிகள் 29, இராணுவ ஜெக்கெட், ​ஹெரோய்ன் 2070 மில்லிகிராம், தடைச்செய்யப்பட்ட கத்திகள் 7 மற்றும் 17,040 ரூபாய் பணம் என்ப​ன கைப்பற்றப்பட்டுள்ளன. அத்துடன் சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சுற்றிவளைப்புத் தேடுதல் சனிக்கிழமை (24) இரவு 11 மணியளவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.. கைது செய்யப்பட்ட நபருடன் இருந்த பிரதான சந்தேக நபர், இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றவர் என்றும் தீகல பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர் என்பதும் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.

பிரதான சந்தேக நபரான 43 வயதான நபர், ஈசி கேஷ் முறைமையின் ஊடாக போதைப் பொருள் விநியோகிக்கும் நபர் என்றும் அறிய முடிகின்றது. அவரிடமிருந்த கைக்குண்டு கொழும்பு பிரதேசத்தில் உள்ள நபரொருவரிடம் இருந்து விலைக்கு கொள்வனவு செய்யப்பட்டுள்ளது என்பது விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.

ஆகையால் அவரை தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்துவதற்கான நீதிமன்ற அனுமதியைப் பெற்று, மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Share.
Exit mobile version