மின்கட்டண திருத்தம் தொடர்பாக பொதுமக்களின் கருத்துகளைப் பெறுவதற்காக சிறப்பு பொது கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட உள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

இதன்படி, எதிர்வரும் செவ்வாய்கிழமை பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் மக்கள் கருத்தறியும் அமர்வு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மின்கட்டண உயர்வு அல்லது குறைப்பு தொடர்பாக பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க வாய்ப்பு உள்ளது.

தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் உட்பட எவருக்கும் இதற்கான கருத்துக்களை வழங்க முடியும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மின்சாரக் கட்டணங்கள் மற்றும் ஏனையவை தொடர்பில் ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களுக்கிடையிலான கலந்துரையாடல் ஒன்று இம்மாத இறுதிக்குள் நடைபெறவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் புதிய தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ தெரிவித்திருந்தார்.

Share.
Exit mobile version