உலக சந்தையில் இன்று தங்கத்தின் விலை 6 டொலர்களால் அதிகரித்து ஒரு அவுன்ஸ் 1921 டொலர்களாக நிலவுகிறது.

கடந்த சிலதினங்களாக தங்கத்தின் விலை குறைவடைந்து வந்த நிலையில் இன்று ஓரளவுக்கு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இதேவேளை இலங்கையில் தங்கத்தினுடைய விலை எதிர்வரும் நாட்களில் குறைவடையலாம் என தங்க வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

நேற்றைய தினம் கொழும்பு செட்டியார் தெருவில், 24 கெறட் தங்கம் ஒரு லட்சத்து 61 ஆயிரம் ரூபாவாகவும், 22 கெறட் நகை தங்கம் ஒரு லட்சத்து 49 ஆயிரம் ரூபாயாகவும் நிலவின.

Share.
Exit mobile version