லங்கா சதொச நிறுவனம் கடந்த 2015ம் ஆண்டில் ஆறு பில்லியன் ரூபா பெறுமதியான அரிசி மோசடியொன்றில் ஈடுபட்டுள்ளது கோப் குழுவில் அம்பலமாகியுள்ளது

கடந்த 2015ம் ஆண்டில் மைத்திரிபால சிரிசேனவின் ஆட்சிக்காலத்தில் சதொச நிறுவனம் ஆறுபில்லியன் ரூபா செலவில் இலங்கைக்கு அரிசி இறக்குமதி செய்திருந்தது.

பின்னர் குறிப்பிட்ட காலத்தின் பின்னர் அதனை மனிதப் பாவனைக்குப் பொருத்தமற்றதாக தெரிவித்து, கால்நடை தீவனமாக மிகக் குறைந்த விலைக்கு புறக்கோட்டை சந்தைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது

பின்னர் சதொச நிறுவன உயர் அதிகாரிகள் புறக்கோட்டை சந்தையில் இருந்து புதிய அரிசி கொள்வனவு செய்யும் சாக்கில் தாங்கள் முன்பு விற்ற அதே அரிசியை பெருந்தொகைப் பணம் செலவழித்து , மீண்டும் சதொசவுக்கே கொள்வனவு செய்துள்ளனர்.

நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கோப் குழு கூட்டத்தில் இந்த விபரங்கள் பொதுஜன பெரமுணவின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மதுர விதானகேவினால் வௌியிடப்பட்டுள்ளது.

Share.
Exit mobile version