துப்பாக்கிச்சூடு மற்றும் பாதாள உலகக்குழு செயற்பாடுகள் தொடர்பில் கைது செய்யப்படுபவர்களை வழக்கு விசாரணை நிறைவடையும் வரை தடுத்து வைக்கும் வகையில் சட்டத்தில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என காவல்துறை பேச்சாளர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

குறித்த தரப்பினர், குறிப்பிட்ட காலத்திற்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர் வெளியே சென்று அந்தக் குற்றச் செயல்களிலேயே மீண்டும் ஈடுபடுகின்றனர்.

சில நபர்கள், பல்வேறு சந்தர்ப்பங்களில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்ட சந்தர்ப்பங்களும் உள்ளன.

எனவே, வழக்கு நிறைவடையும் வரையில் அவர்களை விளக்கமறியலில் வைக்கக்கூடிய நிலைமை இருந்தால் இந்த விடயத்தில் ஏதேனுமோர் அளவுக்கு கட்டுப்பாட்டை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும் என காவல்துறை பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

Share.
Exit mobile version