ஜப்பானிய தொழில் சந்தையை இலக்காகக் கொண்டு ஆரம்ப மட்டத்திலிருந்து பாடசாலை பாடத்திட்டத்தில் ஜப்பானிய மொழியை உள்ளடக்குவதற்கு விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இன்று (22) பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை ஆற்றிய அமைச்சர், அமைச்சரவை ஊடாக இதற்கான விசேட அங்கீகாரம் கிடைத்துள்ளதாக குறிப்பிட்டார்.
இதன்படி எதிர்காலத்தில் கல்வி அமைச்சுடன் இணைந்து ஆரம்ப பிரிவினருக்கு அடிப்படை மட்டத்திலும் தரம் 6 இலிருந்து ஜப்பானிய மொழியை ஒரு பாடமாக கற்பிப்பது தொடர்பான செயற்பாடுகள் தயாராகி வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
ஜப்பானிய சந்தையை இலக்காகக் கொண்டு 5000 ஜப்பானிய மொழி பயிற்றுவிப்பாளர்களைக் கொண்ட குழுவை ஆரம்பிக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்திருந்தார்.