அம்பாறை மாவட்டத்தில் மீள்குடியேற்றப் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கண்ணிவெடிகள் இல்லாத பிரதேசமாக மாவட்டத்தை உறுதிப்படுத்தியதன் பின்னர் மக்களை கிராமங்களில் மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்டம் மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவில் தங்கவேலாயுதபுரம், கஞ்சிகுடிச்சாறு, காஞ்சிரம்குடா, சாகாமம் ஆகிய நான்கு கிராமங்களிலும் 343 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் 72 வீடுகள் கட்டப்பட உள்ளன. மீள்குடியேற்றப்படும் பயனாளிகளுக்கு தற்காலிக வீடுகள் மற்றும் சுகாதார வசதிகளை வழங்குவதற்காக 38000 ரூபா நிதியுதவி வழங்கப்படவுள்ளது.

மேலும், நிரந்தர வீடுகள் கட்டி, குடிநீர், மின்சாரம், சுகாதாரம் மற்றும் வாழ்வாதாரத் திட்டங்கள் போன்ற அத்தியாவசிய உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு பாடுபட்டு வருகிறது.

Share.
Exit mobile version