இலங்கை கிரிக்கெட் அங்கத்துவத்தால் அங்கீகரிக்கப்பட்ட 2022 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையின்படி, இலங்கை கிரிக்கெட் கடந்த ஆண்டில் 6.3 பில்லியன் ரூபா நிகர உபரி வருமானத்தை பதிவு செய்துள்ளது.

குறித்த வருடத்தில் இலங்கை கிரிக்கெட்டின் மொத்த வருமானம் 17.5 பில்லியன் ரூபாவாக பதிவாகியிருந்த நிலையில், இது 2021 ஆம் ஆண்டு மொத்த வருமானத்தை விட 120 சதவீத வளர்ச்சியாகும் என இலங்கை கிரிக்கெட் சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது..

இது தொடர்பான கணக்கறிக்கை கடந்த 17ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் விசேட பொதுக்கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டில் இலங்கை கிரிக்கெட் பதிவு செய்த 6.3 பில்லியன் ரூபா உபரியானது வரலாற்றில் பதிவான அதிகூடிய பெறுமதியாகும் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகள், உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகள், அனுசரணை ஒப்பந்தங்கள் மற்றும் சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் வருடாந்த ஒதுக்கீடுகள் இந்த வருமான வளர்ச்சிக்கு பங்களித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் மேலும் தெரிவித்துள்ளது.

Share.
Exit mobile version