ஜூன் மாதத்தின் முதல் 18 நாட்களில் மட்டும் 50 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர் என்று சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்ட சமீபத்திய தரவுகளின்படி, ஜூன் மாதத்தில் இதுவரையான காலப்பகுதியில் 52,663 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் மாதத்தில், இந்தியாவில் இருந்தே அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கிணங்க, ஜூன் மாதத்தில் இதுவரை மொத்தம் 15,406 இந்தியர்கள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

மேலும், ரஷ்யாவிலிருந்து 4,748 சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 3,905 பேரும், சீனாவிலிருந்து 2,823 பேரும், அவுஸ்திரேலியாவிலிருந்து 2,688 பேரும், கனடாவிலிருந்து 2,503 சுற்றுலாப் பயணிகளும் இந்த மாதத்தில் நாட்டுக்கு வந்துள்ளனர்.

மே மாதத்தில் மொத்தம் 83,309 சுற்றுலாப் பயணிகள் வந்ததாகவும் இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 577,149 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர் என்றும் சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

Share.
Exit mobile version