கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக கிழக்கு மாகாணத்தில் உரப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரத்தை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கமதொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

அண்மையில் உரப்பற்றாக்குறையால் தமது விவசாய நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு உரிய தீர்வை பெற்றுத் தருமாறும் கிழக்கு மாகாண ஆளுநரிடம் மூன்று மாவட்ட விவசாயிகளும் கோரிக்கை முன்வைத்தனர்.

விவசாயிகள் முவைத்த கோரிக்கைக்கு அமைவாக, விரைவாக உரிய தீர்வு பெற்றுத் தரப்படுமென விவசாயிகளுக்கு வாக்குறுதியளித்திருந்த கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவின் கவனத்துக்கு இந்த விடயத்தை கொண்டு சென்றதுடன் உரப் பற்றாக்குறைக்கு தீர்வையும் பெற்றுக் கொடுத்துள்ளார்.

அதன் பிரகாரம் கிழக்கு மாகாணத்தில் உரப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு போதிய உரத்தை விநியோகிப்பதற்கான நடவடிக்கைகளை கமதொழில் அமைச்சு ஆரம்பித்துள்ளது.

Share.
Exit mobile version