இறக்குமதி செய்யப்படுகின்ற சீமெந்துக்கான செஸ் தீர்வை (CESS) அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஜுன் மாதம் 17ஆம் திகதி அமுலுக்கு வரும் வகையில் இந்த அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டிருப்பதாக, முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி 50 கிலோவுக்கு குறைந்த பொதிகளாக இறக்குமதி செய்யப்படுகின்ற சீமெந்து பொதி ஒன்றுக்கான செஸ் தீர்வை 5 ரூபாயில் இருந்து 8 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் 50 ரூபாவுக்கும் அதிகமான பொதியாக அல்லது மொத்தமாக இறக்குமதி செய்யப்படுகின்ற சீமெந்துக்கான செஸ் தீர்வை, கிலோவுக்கு 3 ரூபாயில் இருந்து 5 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Share.
Exit mobile version