அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.

இதன்படி, கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும்போது டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி இன்றைய தினம்(19.06.2023) மீண்டும் உயர்வடைந்துள்ளது.

இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (19.06.2023) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 315.12 ரூபாவாகவும், கொள்வனவு விலை 297.53 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 239.65 ரூபாவாகவும், கொள்வனவு விலை 223.50 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

பவுண்ட் மற்றும் யூரோவின் பெறுமதி :

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 345.72 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 324.06 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 404.69 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 380.05 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இலங்கை வர்த்தக வங்கிகளின் தரவுகளின் படி, கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்றையதினம்(19.06.2023) மீண்டும் இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்து, டொலரின் பெறுமதி வீழ்ச்சி கண்டுள்ளது.

மக்கள் வங்கியில் : அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 301.69 ரூபாவில் இருந்து 298.77 ரூபாவாக குறைந்துள்ளது. விற்பனை பெறுமதியானது 319.54 ரூபாவில் இருந்து 316.44 ரூபாவாக குறைந்துள்ளது.

கொமர்ஷல் வங்கி : அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 296.92 ரூபாவில் இருந்து 294.94 ரூபாவாக குறைந்துள்ளது. விற்பனை பெறுமதியானது 320 ரூபாவில் இருந்து 318 ரூபாவாக குறைந்துள்ளது.

சம்பத் வங்கி : அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதியானது 301 ரூபாவில் இருந்து 297 ரூபாவாக குறைந்துள்ளது. அத்துடன் விற்பனை பெறுமதியானது 318 ரூபாவில் இருந்து 314 ரூபாவாக குறைவடைந்துள்ளது.

Share.
Exit mobile version