இலங்கையில் எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு வருடத்திற்குள் 620 புதிய நோயாளர்கள் மற்றும் 81 இறப்புகள் பதிவாகியுள்ளதாக தேசிய சுகாதார சேவை திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், ஆணுறைகளின் சீரற்ற பயன்பாடும் இதற்கு பிரதான காரணம் என்று திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அதன்படி கடந்த ஆண்டு பதிவான ஒட்டுமொத்த தொற்றுக்களுடன் ஒப்பிடும்போது, இந்த வருட முதல் காலாண்டில் (ஜனவரி-மார்ச்) 13 வீத அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
மேலும், எண்ணிக்கையில் எச்ஐவி, எயிட்ஸ் தொற்றுக்கள் 4,556 இலிருந்து 5,176 ஆக அதிகரித்துள்ளது.
இந்த ஆண்டின் முதல் காலாண்டில், 165 புதிய நோயாளர்கள் மற்றும் 15 இறப்புகள் பதிவாகியுள்ளன. எனினும் 2022 ஆம் ஆண்டுக்குள் மொத்தம் 1,520 எயிட்ஸ் தொடர்பான இறப்புகள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.