முட்டை ஒன்றின் விலை 35 ரூபாவாக குறைக்கப்பட்டு கோதுமை மாவின் விலை குறைக்கப்பட்டால் பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலைகளும் குறைக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி சங்கம் தெரிவித்துள்ளது.

தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள கோதுமை மா இறக்குமதியை மீண்டும் ஆரம்பிக்க அரசாங்கம் செயற்பட வேண்டுமென அதன் தலைவர் என்.கே.ஜயவர்தன டெய்லி சிலோன் செய்திப் பிரிவுக்கு தெரிவித்திருந்தார்.

கோதுமை மா இறக்குமதியை நிறுத்தாமல் ஒரு கிலோ மாவின் விலையை 180 முதல் 170 ரூபா வரை குறைத்திருந்தால், பாண் ஒன்றின் விலை 10 ரூபாவுக்கு மேல் குறைக்கப்பட்டிருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share.
Exit mobile version