ஒரு நாள் மற்றும் சாதாரண கடவுச்சீட்டு வழங்கும் சேவையின் கீழ் திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்த விண்ணப்பதாரர்களுக்கு மாத்திரமே இனிமேல் இந்த சேவை வழங்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
www.immigration.gov.lk என்ற இணையத்தளத்தினூடாக அல்லது 0707101060 என்ற இலக்கத்திற்கு அழைப்பதன் மூலம் திகதிகள் மற்றும் நேரங்களை முன்பதிவு செய்யலாம்.
அரச வேலை நாட்களில் காலை 8.30 மணி முதல் மாலை 3.00 மணி வரை உரிய வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.