பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் என்று கூறிக்கொள்ளும் சிலர் உள்ளூர் சந்தையில் தேங்காய் எண்ணெய் விலையை உயர்த்த தயாராகி வருவதாக நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசியஅமைப்பு தெரிவித்துள்ளது.

சந்தையில் தற்போது தேங்காய் ஒன்று 120, 130 ரூபா என அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக அதன் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்தார்.

தேங்காய் விலை அதிகரித்துள்ள போதிலும் வழங்கல் வினைத்திறன் காரணமாக சந்தையில் தேங்காய் எண்ணெய் நியாயமான விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக அவர் தெரிவித்தார்.

சந்தைக்கான விநியோகத்தை சீர்குலைத்து செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்தி தேங்காய் எண்ணெயின் விலையை அதிகரிப்பதே இந்த குழுவின் நோக்கமாகும் என நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு தேசிய இயக்கத்தின் தலைவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

Share.
Exit mobile version