ஜிம்னாஸ்டிக் உலக செம்பியன்ஷிப் போட்டிக்கு இலங்கை வீராங்கனை மில்கா கெஹானி நேற்று (16) தகுதி பெற்றார்.

சிங்கப்பூரில் நடைபெற்ற ஆசிய ஆர்ட்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் செம்பியன்ஷிப் போட்டியில் 10-வது இடத்தைப் பிடித்ததன் மூலம் அவா் இந்த தகுதியை பெற்றாா்.

ஆசிய ஆர்ட்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் செம்பியன்ஷிப் போட்டி தற்போது சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது.

அதற்காக 20 நாடுகளைச் சேர்ந்த பல விளையாட்டு வீர, வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனா்.

இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியில் இணைந்துகொண்ட மில்கா கெஹானி, 53 பெண் வீராங்கனைகள் மத்தியில் ஆசிய ஆர்ட்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் செம்பியன்ஷிப் போட்டியில் பத்தாவது இடத்தை வென்றார்.

அதன்படி இந்த ஆண்டு பெல்ஜியத்தில் நடைபெறவுள்ள உலக செம்பியன்ஷிப் ஜிம்னாஸ்டிக் போட்டிக்கு தகுதி பெற்றார்.

பல சர்வதேச போட்டிகளில் அனுபவம் வாய்ந்த ஜிம்னாஸ்டிக் வீரங்கனையான மில்கா கெஹானி, 2021 ஆம் ஆண்டு இடம்பெற்ற டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share.
Exit mobile version