மாலம்பே கடுவெல மற்றும் தலங்கம பிரதேசங்களில் ஆயுர்வேத மசாஜ் நிலையங்களாக நடத்தப்பட்ட 6 விபச்சார நிலையங்களை சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

25 யுவதிகள் உட்பட 31 பேரை உயர் பொலிஸ் அதிகாரிகளின் உத்திரவுக்கமைய கைது செய்ததாக பாணந்துறை வலன மத்திய ஊழல் ஒழிப்பு செயலணி தெரிவித்துள்ளது.

அந்த மையங்களுக்கு உரிமம் இல்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இரவு வேளைகளில் திறக்கப்படும் இந்த நிலையங்கள் தொடர்பில் பாணந்துறை வலன மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த தொடர் தகவலின் அடிப்படையில் கடுவலை நீதவான் நீதிமன்றில் பெறப்பட்ட தேடுதல் உத்தரவுக்கு அமைய இந்த சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான சுற்றிவளைப்பில் ஆறு பொலிஸ் குழுக்கள் பங்கேற்றுள்ளதுடன், பொலிஸ் முகவர்கள் ஊடாக குறித்த இடத்தை விபசார நிலையம் என உறுதிப்படுத்திய பின்னரே இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட பெண்களில் பெரும்பான்மையானவர்கள் தூர பிரதேசங்களில் வசிப்பவர்கள் எனவும் பொருளாதார நெருக்கடி காரணமாக கொழும்பில் வேலைக்கு வந்து கூடுதல் வருமானம் ஈட்டுவதற்காக இரவு வேளைகளில் இந்த நிலையத்தில் வேலை செய்து பணம் சம்பாதித்து வருவதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Share.
Exit mobile version