பதில் நிதி அமைச்சராக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பும் வரை அவர் தற்காலிக நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, பதில் பாதுகாப்பு அமைச்சராக இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரான்ஸில் இருந்து ஜனாதிபதி வரும் வரை பதில் பாதுகாப்பு அமைச்சராக பிரேமித பண்டார தென்னகோனும் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய இராச்சியம் மற்றும் பிரான்ஸிற்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டிலிருந்து புறப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி தலைமையிலான குழுவினர் இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்றுள்ளனர்.

ஜனாதிபதி விக்கிரமசிங்க தனது ஐரோப்பிய சுற்றுப்பயணத்தின் போது, ​​இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயல்முறை பற்றி விவாதிக்க பல முக்கிய பிரமுகர்களை சந்திக்க உள்ளார்.

கடன் மறுசீரமைப்பு பொறிமுறை தொடர்பாக பாரிஸ் கிளப் உறுப்பினர்களுடன் ஜனாதிபதி கலந்துரையாடவுள்ளார்.

ஜனாதிபதி ஜூன் 25 ஆம் திகதி நாடு திரும்ப உள்ளார்.

Share.
Exit mobile version