உஸ்வதகேயாவ பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலையொன்றில் நுகர்வுக்குத் தகுதியற்ற சுமார் 4000 கிலோகிராம் நிறமுடைய பருப்பு கையிருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த கலர் பருப்புகளை உரிய தொழிற்சாலையின் களஞ்சியசாலையில் வைத்து சீல் வைப்பதற்கு நுகர்வோர் அதிகார சபையின் அவசர சோதனை பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேலும், அவற்றின் மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டு அறிக்கை பெறப்பட்ட பிறகு, தொழிற்சாலை மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.