சாதாரண தரப் பரீட்சையில் மாணவர்கள் சித்தி பெறுகின்றனரா? அல்லது நுான சித்தி (failed) அடைகின்றனரா? என சோதிப்பதா? அல்லது வேறு முறைப்படி பரீட்சை நடத்தப்பட வேண்டுமா? என்பதை எதிர்காலத்தில் பரிசீலிக்கவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று (16) முற்பகல் அலாி மாளிகையில் இடம்பெற்ற ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் குறிப்பிட்டுள்ளாா்.

கொழும்பில் இடம்பெற்ற பிரதான நிகழ்வை ஒட்டி, நாடளாவிய ரீதியில் அனைத்து மாகாணங்களிலும் 7,342 ஆசிரியர்களுக்கான நியமனங்கள் இன்று வழங்கப்பட்டன.

இதன்படி கொழும்பு மாவட்டத்தில் தேசிய பாடசாலைகளுக்கு 1,729 ஆசிரியர்களும் மேல் மாகாண பாடசாலைகளுக்கு 626 ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டனர்.

Share.
Exit mobile version