உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றபோது, கட்டான பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய புலனாய்வு அதிகாரி ஒருவர் தமக்கு வழங்கப்பட்ட கடமைகளை செய்யத் தவறியமைக்காக சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

இது குறித்து முன்னெடுக்கப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணையின் அடிப்படையில், அவருக்கு எதிராக 12 ஒழுக்காற்று மீறல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், பொலிஸ் உத்தியோகத்தர் தனது குற்றத்தை முதற்கட்டமாக ஒப்புக்கொண்ட காரணத்தினால் அவரை பணி நீக்கம் செய்ய பொலிஸ் மா அதிபர் தீர்மானித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.

Share.
Exit mobile version