அண்மைக்காலமாக இலங்கையர்களிடையே தோல் புற்றுநோய் தாக்கம் அதிகரித்துள்ளதாக தோல் நோய் வைத்திய நிபுணர் வைத்தியர் ஸ்ரீஆனி சமரவீர தெரிவித்துள்ளார்.
இலங்கையர்களின் தோலின் நிறம் மற்றும் மெலனின் பாதுகாப்பினால் தோல் புற்றுநோய் ஏற்படுவது இயற்கையாகவே குறைவதாகவும் இருந்தாலும் சருமத்தை வெண்மையாக்க பலர் பயன்படுத்தும் சில மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்களால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக திருமதி ஸ்ரீஆனி சமரவீர தெரிவித்தார்.
உரிய ஆலோசனையின்றி சில தைலங்கள் பயன்படுத்தப்படுவதும் இதற்குக் காரணம் எனத் தெரிவித்த வைத்தியர் மேலும் குறிப்பிடுகையில் சருமத்தை வெண்மையாக்க எந்த மருந்தையும், தைலத்தையும் விசாரணையின்றி பயன்படுத்தும் போக்கு நாட்டில் காணப்படுகின்றதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.