நாட்டின் பல பகுதிகளில் நிலவும் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் புத்தளம் மாவட்டத்தில் சாதாரண தரப் பரீட்சைக்கு செல்லும் பள்ளி மாணவர்களுக்கு இலங்கை கடற்படையினர் 24 மே 2022 அன்று போக்குவரத்து உதவிகளை வழங்க நடவடிக்கை எடுத்தனர்.
புத்தளத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ள வடமேற்கு கடற்படை கட்டளைக்கு உட்பட்ட SLNS தம்பபன்னியின் வெள்ள நிவாரண குழுக்களால் நிவாரண நடவடிக்கைகள் நீட்டிக்கப்பட்டுள்ளன. கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக கடற்படையினர் வெள்ள அபாய பகுதிகளில் நிவாரணக் குழுக்களை துரிதமாக ஈடுபடுத்தியுள்ளனர். அதன்படி, மே 24 ஆம் திகதி அப்பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தைத் தொடர்ந்து, புத்தளம் சாஹிரா கல்லூரி மற்றும் இந்துக் கல்லூரியின் சாதாரண தர பரீட்சார்த்திகள் பரீட்சை கேன்டர்களில் இருந்து அவர்களின் வீடுகளுக்கு பாதுகாப்பாக புறப்படுவதை கடற்படை குழுக்கள் உறுதி செய்தன.
அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிக் கோரிக்கைக்கு இணங்க கடற்படையினர் மற்றுமொரு நிவாரணக் குழுவை மே 24 ஆம் திகதி இரவு இரத்தினபுரி கலவான தெல்கொட விகாரைக்கு அனுப்பி வைத்தனர். G.C.E O /L பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு எந்த அசௌகரியமும் ஏற்படாமல் தடுப்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும். இன்று காலை (மே 25) கலவான பிரதேசத்தில் சிறு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பரீட்சை பரீட்சார்த்திகளுக்கு கடற்படை குழுவினர் வெள்ள நிவாரணம் வழங்கினர்.
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையின் பின்னணியில், வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய இடங்களுக்கு தேவைக்கேற்ப சென்றடைய கடற்படை கூடுதல் நிவாரண குழுக்களை தயார் நிலையில் வைத்துள்ளது.