வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள ஆறு சுகாதார வைத்திய அதிகாரி பகுதிகளில் மீண்டும் மலேரியா அச்சுறுத்தல் குறித்து சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்
இதற்கமைய வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் (Anopheles stephens) என்ற நுளம்புகளின் தாக்கம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் அம்பாறை மாவட்டத்திலுள்ள, அக்கரைப்பற்று, திருக்கோவில், ஆலையடிவேம்பு மற்றும் அட்டாளைச்சேனை மற்றும் யாழ்ப்பாணத்தின் பருத்தித்துறை மருத்துவ அதிகாரி பிரிவிலேயே இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை 2016 டிசம்பர் முதல் 2017 ஏப்ரல் வரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலம் 2016 ஆம் ஆண்டு மன்னாரிலும் அதன் பின்னர் வடமாகாணத்தின் யாழ், முல்லைத்தீவு மாவட்டங்களிலும் முதன்முதலில் மலேரியாவை பரப்பும் நுளம்புகள் கண்டறியப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.