இம்மாதம் கடந்த 7 நாட்களில் 334 டெங்கு நோயாளர்கள் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

இதுவரை 43,752 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், அதிகளவானோர் கம்பஹா மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொற்றுநோயியல் திணைக்களத்தின் தகவல்களின்படி, மேல் மாகாணத்தில் அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளதோடு, டெங்கு நோய் பரவும் அபாயம் உள்ள 67 இடங்கள் இனங்காணப்பட்டுள்ளன.

கண்டி, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு மற்றும் காலி ஆகிய மாவட்டங்களில் டெங்கு மீண்டும் அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் சிறுவர்கள் மத்தியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளதாகவும், பெற்றோர்கள் இது தொடர்பில் அவதானம் செலுத்துமாறும் குழந்தை வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் மழையுடன் இந்த நிலை அதிகரிக்கலாம் எனவும் பாடசாலை செல்லும் மாணவர்களில் கணிசமான வீதமானவர்கள் டெங்கு நோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

Share.
Exit mobile version