சீமெந்து உள்ளிட்ட கட்டட நிர்மாணத்துறைசார் பொருட்களின் விலையை 25 சதவீதத்தினால் குறைக்க வேண்டும் என நிர்மாணத்தறை வல்லுநர்கள் சபையின் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி வலுவடைந்துள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விலை குறைக்கப்படாமையால், உற்பத்தியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் பாரிய அளவில் இலாபம் ஈட்டுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விலை அதிகரிப்பின் காரணமாக, தரமற்ற கம்பிகள் மற்றும் வர்ணப் பூச்சுகள் என்பன சந்தையில் விற்பனை செய்யப்படுவதாகவும் நிஷாந்த விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

Share.
Exit mobile version