சுமார் 8 இலட்சம் சாரதி அனுமதி அட்டைகளை தனியார் துறையில் அச்சிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.
மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் உள்ள அச்சு இயந்திரங்கள் போதிய திறன் இன்மையால் பல மாதங்களாக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த அவர்,
சுமார் 20 கோடி ரூபாவை செலவழித்து புதிதாக இயந்திரங்களை வாங்க முடியாத காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
ஒரு சாரதி அனுமதி அட்டைக்கு 150 ரூபா செலுத்தும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க மேலும் தெரிவித்தார்.