பேரின்ன பொருளாதார கட்டமைப்பினை பேணும் வரை இலங்கை அரசாங்கத்திற்கு நிதியுதவி வழங்குவதற்கான எந்தவித திட்டமும் இதுவரை வகுக்கப்படவில்லை என உலக வங்கி அறிவித்துள்ளது.
உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டுள்ள இலங்கை மக்கள் தொடர்பில் உலக வங்கியானது அக்கறையுடன் செயற்படுகின்றது.
எனினும் பொருளாதார ஸ்திரதன்மையை ஏற்படுத்துவதில் உலக வங்கியானது சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து செயற்படுவதாகவும் தெரிவித்துள்ளது.
உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து நிதியுதவியினை பெற்றுக்கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் எதிர்பார்த்துள்ள நிலையில், உலக வங்கியின் இவ்வாற◌ான அறிவிப்பு பொருளாதாரத்தில் மேலும் தாக்கத்தினை ஏற்படுத்தும் சாத்தியம் காணப்படுவதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.