சுமார் 159 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாண் கட்டளைச் சட்டத்தை ரத்து செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

1864 ஆம் ஆண்டில் 13 இலக்க பாண் கட்டளைச் சட்டமானது, பாண் விற்பனையை ஒழுங்குபடுத்துதல் மற்றும் விற்பனைக்கு வழங்கப்படும் பாணில் கலப்படம் செய்யப்படுவதை தடுக்கிறது.

இந்த சட்டத்தை நீக்குவது தொடர்பில் நேற்று (12) கூடிய அமைச்சரவை கூட்டத்தில், வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ சமர்ப்பித்த பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்தது.

பாண் கட்டளைச் சட்டம் நுகர்வோர் விவகார அதிகார சபையின் 2003ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க கட்டளை சட்டத்தின் சில விதிமுறைகளுடன் ஒத்துப்போவதில்லை என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அமைச்சரவை பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், பாண் கட்டளைச் சட்டத்தை தொடர்ந்தும் அமுல்படுத்துவது அவசியமற்றது என அரசாங்கம் அவதானித்துள்ளது.

இந்நிலையில், பாண் கட்டளைச் சட்டத்தை இரத்துச் செய்வதற்கான சட்டமூல வரைவை தயாரிக்குமாறு சட்ட வரைஞர்களுக்கு அறிவுறுத்தவும் அமைச்சரவை அனுமதி வழங்கியது.

Share.
Exit mobile version