நாட்டில் கோழி இறைச்சியின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதையடுத்து ,கோழி இறைச்சி வியாபாரிகளுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் அடுத்த வாரத்திலிருந்து கோழி இறைச்சி வாங்குவதை தாம் புறக்கணிக்கணிக்கவுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பிஸ்கட் விலை உயர்வைக் கட்டுப்படுத்த என்ன செய்தோமோ அதையே இப்போதும் செய்வோம் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார்.

அமெரிக்க டொலரின் பெறுமதி வீழ்ச்சியால் கிடைத்த பலனை நுகர்வோருக்கு வழங்குமாறு அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தினர் கோழி இறைச்சி விற்பனையாளர்களை எச்சரித்துள்ளனர்.

இப்போதுள்ள இக்கட்டான சூழலைப் பயன்படுத்தி அதிக இலாபம் ஈட்ட முயற்சிக்க வேண்டாம். அமெரிக்க டொலரின் பெறுமதி குறைந்தாலும் இறக்குமதி செய்யப்பட்ட பழவகைகளின் விலைகள் கற்பனை செய்ய முடியாத அளவு அதிகரித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஒரு கிலோகிராம் திராட்சையின் விலை ரூ.2,690 ஆகும். அதேபோல் ஒரு கிலோகிராம் அப்பிளின் விலை ரூ. 2,500 ஆகவுள்ளது. ஐக்கிய அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரித்ததைத் தொடர்ந்து உள்நாட்டு பழவகைகளின் விலைகளும் அதிகரித்துள்ளதாக அசேல சம்பத் தெரிவித்தார்.

Share.
Exit mobile version