கால்நடைகளுக்கு பரவும் தோல் கழலை நோய் காரணமாக மத்திய மாகாணத்தின் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

மத்திய மாகாணத்தில் பல பிரதேசங்களில் தோல் கழலை பதிவாகியுள்ளதாக அதன் பணிப்பாளர் வைத்தியா் ஆர்.எம்.கே.பி. ராஜநாயக்க தெரிவித்துள்ளார்.

இதனை கட்டுப்படுத்த அதிகாரிகள் துாிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மத்திய மாகாண கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்கள பணிப்பாளா் குறிப்பிட்டுள்ளாா்.

கால்நடைகளுக்கு பரவும் நோய் கட்டுப்பாட்டுக்குள் வரும் வரை மாட்டிறைச்சி உண்பதை தவிர்க்குமாறு சுகாதார துறையால் பொது மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.
Exit mobile version